பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையறிந்து அதிர்ந்துபோன மற்ற வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி தடங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் பெட்ரோல் பங்குகளில் ஒன்று. இன்றும் அதே போல் பெட்ரோல் பங்கில் பலர் தங்களது வண்டிகளுக்கு பெட்ரோல் அடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அப்போது பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையறிந்து அதிர்ந்துபோன மற்ற வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடியுள்ளனர். அண்மையில் பெய்த மழைநீர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கலந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பங்க் உரிமையாளர், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பெட்ரோல் பங்க் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெட்ரோலில் தண்ணீர் கலந்த விஷயம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Kannan