திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை செவ்வாய்கிழமை இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

By Kannan