திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் – பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார்.
இவர், இந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி. – ஐதராபாத்) என்ஜினீயரிங் படிப்பதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்.

அரசு பள்ளியில் படித்து ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வென்ற மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவரது கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

By Kannan