பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.
இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.6 லட்சம் பேர் பதிவு செய்வர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும். 

8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

By Kannan