சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, வினாடிக்கு 1,700 கன அடி நீர் வெளியேற்றம்.

இதனால் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாத்தனூர் நீர்பிடிப்பு பகுதிகளில் முதலைகள் உள்ளன. தற்போது உபரி நீர் திறந்து விடப்படும் போது இடது மற்றும் வலது புற கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளில் முதலைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் சாத்தனூர் அணை நீர் பாசன கால்வாயிலோ ஆற்றுப்படுகையிலோ இறங்கி குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Kannan

Leave a Reply

Your email address will not be published.