தொடர்பு வேண்டாம்,
தொட்டாவது போகலாம்,
விருந்தாக வேண்டாம்,
ஓர் மருந்தாய் .!

மடியில் வேண்டாம்
நெடுந்தொலைவாய் ,
துணையாக வேண்டாம்,
ஓர் துரும்பாய்…!

ஒளியாக வேண்டாம்
ஓர் இருட்டாய்,
நினைவாக வேண்டாம்,
ஓர் கனவாய்..!

மடைக்குள் தேங்கும் நீர்
நீயும் அப்படிதான் – ஓர் நாள்,
உன் நலினத்தின் சாரல்,
என் உதிரம் தொடும்….!

காற்றை சுவாசிக்கும் நான்
உன் காதலையும் சுவாசிப்பேன்,
மாற்றம் ஒன்று தான்மாறாதது,
இலக்கின் நினைவுடன் !

             கவிஞர். திருமுருகன் ஏ

By Kannan

Leave a Reply

Your email address will not be published.