• December 5, 2021

ஊமத்தை பயன்கள்

 ஊமத்தை பயன்கள்

ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும். ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும்;நரம்புகளைப் பலப்படுத்தும்.

ஊமத்தை பயன்கள்

ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும், வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற  போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது. இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து  வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல்  போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும். ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌ கீல்வாயு குணமாகும். தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு  ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம். வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில்  பற்றுப் போட வேண்டும். பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து  ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறு முட்களுடன் கூடியவை. இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப்  பயிர் செய்யப்படுகின்றது.

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள…
“அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்… எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிடுமாம்.
முகநூலில் 28-5-2016 ல் செல்வம் எக்ஸ்மென் கூறியது
‘இது கருஊமத்தை….. மற்ற ஊமத்தை போன்று அல்லாது இதன் பூ அடுக்கு அடுக்காக இருக்கும் இது மிகவும் சக்தி வாய்ந்தது இதில் ரசமணி கட்டினால் அளவிட முடியாத சக்தியை வாரிவழங்கும் இது தன ஆகர்சனத்தை ஏற்படுத்தும் தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும் தொழில் தடைகளை தகர்க்கும் போட்டி பொறாமைகளை அழிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.